new born baby FB
இந்தியா

இப்படியும் நடக்குமா!! பால் குடிக்காமல் அழுத குழந்தை.. தாய் செய்த கொடூரச் செயல்..!

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் தொடர்ந்து பால் குடிக்காமல் அழுதுக் கொண்டே இருந்தது. இதனால் பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தில் கொதிக்கும் நீரில் போட்டு தாயே குழந்தையை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Vaijayanthi S

கர்நாடகா அருகே உள்ள நீலமங்கலா என்ற பகுதியில் ராதா என்ற 27 வயதான பெண் ஒருவருக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.. இதனால் குழந்தை சரியாக பால் குடிக்காமல் தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதினால் குழந்தை சாதாரணமாக இல்லை என்று ராதா நம்பினார். இதன் காரணமாக தாய் ராதவிற்கு பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம், குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில், தாய் ராதா மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறியுள்ளனர். அத்துடன் அவரது கணவரும் வேலையில்லாமல், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவர் குழந்தையையும் தாயையும் சரியாக கவனிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம், விஸ்வேஸ்வரபுராவில் உள்ள ராதாவின் பெற்றோர் வீட்டில் திங்கள்கிழமை நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Mom

ராதா அடுப்பைப் பற்றவைத்து, சமையல் பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்துள்ளார். பின்னர் குழந்தையை அதில் வைத்ததாகவும், இதானால் ஏற்பட்ட தீக்காயங்களால் குழந்தை இறந்துவிட்டது என்றும் போலீசார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்..

சமீபத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது.. இதற்கு காரணம் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மன அழுத்தம்தான்.. இது பொதுவாக பிரசவத்திற்குப் பின் சில வாரங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் ஏற்படலாம். இது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களையும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரசவத்திற்குப் பின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

new mom

கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அத்துடன் தாய்க்கு போதுமான ஆதரவு இல்லாதது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நிதி ரீதியான பிரச்சனைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். முக்கியமாக கணவருடன் உள்ள உறவில் சிக்கல்கள் இருந்தால், மன அழுத்தம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூற்கின்றனர்..

பிரசவத்திற்குப் பின் மன அழுத்தத்தின் அறிகுறிகள்

தொடர்ந்து மனச்சோர்வு அல்லது விரக்தியாக உணர்வது. தூங்குவதில் சிரமம் அல்லது அதிக தூக்கம் வருவது.. அத்துடன் சாப்பிட பிடிக்காமல் இருப்பது அல்லது அதிகமாக சாப்பிடுவது. தேவையற்ற கவலைகளை நினைத்து அழுவது. எப்போதும் சோர்வாக உணர்வது. குழந்தையை கவனிப்பதில் ஆர்வமின்மை அல்லது சிரமனாக உணர்வது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் தோன்றுவது ஆகிவை மன அழுத்தத்திற்கான அறிகுறிகளாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்..

பிரசவத்திற்குப் பின் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். அத்துடன் தாய் தனக்கான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு தான் செய்ய நினைக்கும் விஷயங்களை செய்ய வேண்டும். அதற்கு அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவும், துணையின் ஆதரவும் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.