சமூக வலைதளங்கள் அதிகளவு பயன்பாடு
சமூக வலைதளங்கள் அதிகளவு பயன்பாடுhealth

சமூக வலைதளங்கள் அதிகளவு பயன்பாடு... சிறுமிகளில் அதிகரிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை!

சிறுமிகளுக்கு pcos எனப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்னை அதிகரிப்பதற்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களை அதிகளவில் பயன்படுத்துவதும் ஒரு காரணம் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published on

மருத்துவ இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையில் டெல்லி பகுதியில் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 17.4 சதவீத சிறுமிகளுக்கு நீர்க்கட்டி பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களை அதிகம் பயன்படுத்துவது மன அழுத்தத்தை ஏற்படுத்தி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தூண்டி நீர்க்கட்டி போன்ற பிரச்சினைகளுக்கு கொண்டு சென்று விடுவதாக மருத்துவக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இரவில் நெடுநேரம் வரை ஃபோன் பார்ப்பதால் தூக்கம் குறைந்து ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்தி உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் அதிகளவு பயன்பாடு
ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? மருத்துவர் விளக்கம்!

சிறுமிகளிடம் கூட நீர்க்கட்டி பிரச்சினை ஏற்படுவது கவலைக்குரிய விஷயம் என்றும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டை குறைத்து உடல் உழைப்பை அதிகரிப்பதே இதற்கு தீர்வு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com