மகாராஷ்ட்ரா
மகாராஷ்ட்ரா pt web
இந்தியா

மகாராஷ்ட்ரா : அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு!

PT WEB

கடந்த 2 மாதங்களுக்கு முன் மும்பைக்கு அருகில் உள்ள தானே பகுதியில், உரிய வசதிகள் இல்லாததால் அரசு பொது மருத்துவமனையில் 18 பேர் இறந்தனர். அதன் பின் அரசு தரப்பில், “அனைத்து பொது மருத்துவமனைகளிலும் பொது மக்களுக்கு தேவையான மற்றும் அவசியமான மருந்துகள் விரைந்து வைக்கப்படும். போதிய மருத்துவர்களும் உடனடியாக பணியமர்த்தப்படுவர்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதேபோல மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உரிய வசதியின்மையால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 12 பேர் பாம்புக் கடிக்கு சிகிச்சைபெற வந்தவர்கள்.

இந்த மருத்துவமனையை சுற்றிலும் சுமார் 70 முதல் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு, வேறு எங்கும் பாம்புக் கடிக்கு உடனடியாக அவசர சிகிச்சை கொடுக்கும்படியான எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லை என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பலர் உரிய நேரத்தில் சிகிச்சையே கிடைக்காமல் இறக்கின்றனர் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த ஒரேயொரு மருத்துவமனையில் மட்டும்தான் பாம்புக்கடிக்கான குறைந்தபட்ச சிகிச்சைக்காவது இருக்கிறது என்பதால், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே சிலரது உயிர் பிரிந்துவிடுவதாக சொல்லப்படுகிறது.

இதேபோல பச்சிளம் குழந்தைகளுக்காக வாங்கப்படும் சில உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்படாததும் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணாமாக அமைந்துள்ளது. இந்த அதிர்ச்சி செய்தி குறித்த முழு விவரத்தை, இங்கே காணலாம்: