புயல், மாதிரிப்படம் pt web
இந்தியா

வங்கக்கடலில் உருவாகிறது ”சென்யார்” புயல்... இந்திய வானிலை ஆய்வு அறிவிப்பு !

வங்கக் கடலில் வரும் 26 ஆம் தேதி புயல் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, நவம்பர் 26 ஆம் தேதி புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வங்கக் கடலின் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, நவம்பர் 26 ஆம் புயல் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு சென்யார் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மழை அறிவிப்பு

முன்னதாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.