HEADLINES | வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் மம்தா பானர்ஜியின் கேள்வி வரை!
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை. தென் மாவட்டங்கள், காவிரி படுகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு. மேலும், சென்னையில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11ஆயிரத்து 630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை, கோவை மெட்ரோ திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம். திட்டத்தை நடைமுறைப்படுத்த தகுந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கவும் வலியுறுத்தல்...
திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு அமைப்பு. செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேருக்கு இடம்பெற்றுள்ளனர்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை என அண்ணாமலை விளக்கம். தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமரை சந்திக்காமல் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி... நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி.
பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாட்டு பாடும் விஜய், ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் மூலம் வாக்குத்திருட்டில் ஈடுபட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும்... மதுரை பரப்புரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆதார் அட்டையில் இனி பயனாளிகள் புகைப்படம், க்யூ ஆர் கோடு மட்டும் இடம் பெறச்செய்வது குறித்து அரசு பரிசீலனைம் செய்து வருகிறது, இதன்மூலம், தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை.
எஸ்ஐஆர் பணி நெருக்கடி காரணமாக மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பெண் பி. எல்.ஓ. தற்கொலை... இன்னும் எத்தனை உயிர்களை பலிவாங்கப் போகிறது தேர்தல் ஆணையம் என முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்.
27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோ சிறையில் அடைப்பு... ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சதியில் ஈடுபட்ட வழக்கில் நடவடிக்கை.
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நிதான ஆட்டம்... முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவிப்பு.

