இசையமைப்பாளர் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா முகநூல்
இந்தியா

"அனைவரையும் விட தாம் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைக்கிறார்” - எக்கோ நிறுவனம்

PT WEB

அனைவரையும் விட தாம் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைப்பதாக எக்கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திரைப்படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த உரிமை இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இசை நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண் ஆஜராகி, ”இந்திய திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விடும். ” என்று தெரிவித்தார்.

இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனக்கூறிய இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், ”ஆனால் 1970-கள், 80-கள் மற்றும் 90- களில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை” என்று தெரிவித்தார். இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன்,”இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது.” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், ”இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று நினைக்கிறார்.” என்று தன்னை நினைப்பதாக குறிப்பிட்டார். இதற்கு, ”ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்” என்று இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.