“காலம்தான் எல்லாத்துக்குமான பதில்” - மீண்டும் இணைந்த நடிகர்கள் சூரி - விஷ்ணு விஷால்!

பணப்பிரச்னையால் நீதிமன்றம்வரை சென்ற நடிகர்கள் சூரி மற்றும் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளனர்.
சூரி - விஷ்ணு விஷால்
சூரி - விஷ்ணு விஷால்ட்விட்டர் | @TheVishnuVishal

நடிகர் சூரியும், விஷ்ணு விஷாலும் ஒன்றாக நடித்து வந்ததுடன் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். இந்நிலையில் விஷ்ணு விஷாலின் தந்தை தன்னிடம் நிலம் ஒன்றை வாங்கித்தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக சூரி நீதிமன்றம் வரை சென்றார். இந்த விவகாரம் அப்போது பேசுபொருளாக மாறியது.

சூரி - விஷ்ணு விஷால்
”எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை” - சூரி புகாரில் விஷ்ணு விஷாலின் தந்தை நேரில் விளக்கம்

இருதரப்புக்கும் இருந்து இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் மூன்றாவது நபராலே இருவருக்கு இடையே பிரச்னை வந்ததாகவும், அதனை பேசி சரி செய்து விட்டோம் என விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்.

சூரி - விஷ்ணு விஷால்
“ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தப்பில்லை; ஆனால்...” - விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு

இந்நிலையில் தற்போது சூரி மற்றும் தனது தந்தையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ்தளத்தில் விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.

அதில் “காலம் எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் பதிலை சொல்லும். நேர்மறை விஷயங்களோடு பயணிப்போம் சூரி அண்ணா... லவ் யூ அப்பா” என விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார். இதனை ரீ-ட்வீட் செய்து, நடப்பவை எல்லாம் நன்மைக்கே என சூரி பதிவிட்டுள்ளார்.

பண பிரச்னையில் நீதிமன்றம் சென்றிருந்த இருவரும் தற்போது மீண்டும் இணைந்திருப்பது, சினிமா வட்டரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com