கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து pt desk
இந்தியா

இடுக்கி | கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்

இடுக்கி அடிமாலி அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தமிழக - கேரளா எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ளது கொம்பிடிஞ்சால் கிராமம். இங்கு, சனிக்கிழமை இரவு முற்றிலும் வீடுகள் எதுவும் இல்லாமல், தனியாக இருந்த கூரை வீடு ஒன்று முழுவதுமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.

Death

அப்பகுதி வாசிகள் அளித்த தகவலின்படி, போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் நிகழ்விடம் வந்து சடலமாக கிடந்த நால்வரின் உடல்களை மீட்டு அடிமாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தீ விபத்தில் உயிரிழந்தது 70 வயது மூதாட்டி பொன்னம்மா, அவரது மகள் சுபா (39), சுபாவின் குழந்தைகள் 9 வயது அபிநந்த், நான்கு வயது அபினவ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.