வேலூர் | குடும்பப் பிரச்னை தொடர்பான புகார் - காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 46 பேர் கைது
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த உமையாணி என்ற பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், கணவர் வீட்டில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை தொடர்பாக பெண் அளித்த புகாரில் குடியாத்தம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் கூறி AIMIM கட்சியைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 பேர் நேற்று குடியாத்தம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
இவர்களை காவல் துறையினர் சித்தூர் கேட் அருகே தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பணி செய்யவிடாமல் தடுத்தது, சட்டவிரோத கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, AIMIM மாவட்ட பொறுப்பாளர் ஷகில் அஹமது, ராஷ்ட்ரிய உலமா கட்சி தேசிய செயலாளர் இஸ்மாயில் உட்பட 46 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.