இந்தியா

பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி..!

பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி..!

webteam

கிரண்பேடியைப் போல வர வேண்டும் என்பதற்காகவே தனது பெற்றோர் கிரண் ஸ்ருதி என பெயர் வைத்ததாக தமிழக ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

இளம் ஐபிஎஸ் வீரர்களுடன் காணொலி மூலமாக பிரமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம் பேச்சைத் தொடங்கினார் பிரதமர் மோடி. அவரிடம் இன்ஜினியரிங் படித்து விட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு செய்தீர்கள் என பிரதமர் மோடி கேட்டதற்கு, சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் காவல்துறையை தேர்ந்தெடுத்தேன் என்று கிரண் ஸ்ருதி தெரிவித்தார். அத்துடன் கிரண்பேடி போலவே வரவேண்டும் என்பதற்காக தனக்கு கிரண்ஸ்ருதி என பெற்றோர் பெயர் வைத்ததாக அவர் பதில் அளித்தார். மேலும் இளம் ஐபிஎஸ் வீரர்கள் டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய யோகா செய்ய வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தினார்.