தீ விபத்து லக்னோ முகநூல்
இந்தியா

லக்னோ| தீ விபத்தால் புகையால் சூழ்ந்த கட்டிடம்.. 200 மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக மீட்பு!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது லோக் பந்து ராஜ் நாராயண் ஒருங்கிணைந்த மருத்துவமனை. இங்கு கடந்த 14 ஏப்ரல் அன்று மாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே, அலறிய நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தன.

இதனையடுத்து , நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கிட்டதட்ட 200 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் இரண்டாம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் முழு கட்டிடமும் அடர்ந்த புகையால் சூழந்தது.

இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரதேஷ் பதக் தெரிவிக்கையில், “ இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால், புகை சூழ்ந்தது. இதனையடுத்து, நோயாளிகளை உடனடியாக வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது. மொத்தம் சுமார் 200 நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத சூழலில், தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.