model image meta ai
இந்தியா

ரூ.1.17 கோடிக்கு பதிவு செய்யப்பட்ட கார் எண்.. 'HR 88 B 8888' எண்ணில் அப்படி என்னதான் சிறப்பு?

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண், ரூ.1.17 கோடிக்கு ஹரியானாவில் விற்பனை செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

Prakash J

இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண், ரூ.1.17 கோடிக்கு ஹரியானாவில் விற்பனை செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில், ஓர் இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேருவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்காக பலரும் பலவிதமான வாகனங்களில் பயணிக்கின்றனர். தவிர, சொந்தமாகவும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக நாளுக்குநாள் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் வாங்குவது ஒருபுறமாக இருந்தாலும், மறுபுறம் அந்த வாகனங்களுக்கு பதிவு எண்ணும் வாங்க வேண்டிய நிலையும் உள்ளது. சிலர், அந்த எண்ணை ராசியாகக் கருதி தனக்கு விருப்பமான எண்ணைக் கேட்பர். அதற்காக பன்மடங்கு தொகையும் வழங்கப்படுகிறது.

register number

இந்த நிலையில், இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண், ரூ.1.17 கோடிக்கு ஹரியானாவில் இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் வாரந்தோறும் VIP அல்லது ஃபேன்ஸி எண் தகடுகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஏலம் தொடங்குகிறது.

ஏலம் அதிகாரப்பூர்வ fancy.parivahan.gov.in போர்ட்டலில் முழுமையாக ஆன்லைனில் நடைபெறும். அந்த வகையில், இந்த வாரம், ஏலத்திற்கு வந்த அனைத்து எண்களிலும், 'HR88B8888' என்ற பதிவு எண் அதிகபட்சமாக 45 பேரால் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த எண்ணுக்கு அடிப்படை ஏல விலையாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டது, இது கடந்துசெல்லும் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மதியம் 12 மணிக்கு, ஏல விலை ரூ.88 லட்சமாக இருந்த நிலையில், பின்னர் அது மாலை 5 மணிக்கு ரூ.1.17 கோடிக்கு இறுதியானது. இதன்மூலம் 'HR88B8888' என்ற எண் தகடு, ஹரியானாவில் விற்கப்பட்ட இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண்ணாக மாறியிருக்கிறது. கடந்த வாரம், 'HR22W2222' என்ற பதிவு எண் ரூ.37.91 லட்சத்துக்கு ஏலம் போனது.

முன்னதாக, நடப்பாண்டு ஏப்ரல் மாதம், கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான வேணு கோபாலகிருஷ்ணன் என்பவர், தனது லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்டே காருக்கு, "KL 07 DG 0007" பதிவு எண் தகட்டை ரூ.45.99 லட்சத்திற்கு வாங்கினார். இந்த எண்ணுக்கான ஆரம்ப ஏல விலை ரூ.25,000 ஆக இருந்தது. '0007' எண், ஜேம்ஸ் பாண்டின் குறியீட்டை நினைவூட்டுகிறது. மேலும், இது கேரளாவின் ஆடம்பர ஆட்டோமொபைல் காட்சியில் கோபாலகிருஷ்ணனின் அந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது.

model image

HR88B8888 என்றால் என்ன?

HR88B8888 என்பது ஏலத்தின் மூலம் பிரீமியத்தில் வாங்கப்பட்ட ஒரு தனித்துவமான வாகன எண் அல்லது VIP எண். HR என்பது மாநிலக் குறியீடாகும், இது வாகனம் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. 88 என்பது வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள ஹரியானாவில் உள்ள குறிப்பிட்ட பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) அல்லது மாவட்டத்தைக் குறிக்கிறது.

குறிப்பிட்ட RTO-விற்குள் வாகனத் தொடர் குறியீட்டைக் குறிக்க B பயன்படுத்தப்படுகிறது. 8888 என்பது வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான, நான்கு இலக்க பதிவு எண். 'B' என்ற எண்ணை பெரிய எழுத்தில் எண்ணும்போது எட்டு எண்களின் சரம்போல தோற்றமளிப்பதும், ஒரே ஒரு இலக்கம் மட்டுமே திரும்பத் திரும்ப வருவதும் இந்த நம்பர் பிளேட்டின் சிறப்பு ஆகும்.