பல மடங்கு உயர்கிறது வாகனப் பதிவு கட்டண‌ம்...!

பல மடங்கு உயர்கிறது வாகனப் பதிவு கட்டண‌ம்...!
பல மடங்கு உயர்கிறது வாகனப் பதிவு கட்டண‌ம்...!

பெட்ரோல், டீசலில் இயங்கும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரச‌ திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டைக் கு‌றைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை புதிய வரைவை தயாரித்துள்ளது. இதில் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இரு சக்கர வாகனத்துக்கான பதிவுக் கட்டணம் 50 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 300யில் இருந்து 5 ஆயிரமாகவும், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 600 இல் இருந்து 5 ஆயிரமாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

4 சக்கர சரக்கு வாகனங்களுக்கு ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், நடுத்தர, கனரக, சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு ஆயிரத்து 50‌0 ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் பதிவுக் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், டீசல் வாகனங்களின் புதுப்பிப்பு கட்டணத்தையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது‌.

இதன்படி இரு சக்கர வாகனத்துக்கான புதுப்பிப்பு கட்டணம் 50 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கான கட்டணம் 300-ல் இருந்து 10 ஆயிரமாகவும், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 600-இல் இருந்து 15 ஆயிரமாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 4 சக்கர சரக்கு வாகனங்களுக்கு ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், நடுத்தர, கனரக, சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு ஆயிரத்து 50‌0 ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாயாகவும் புதுப்பிப்பு கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்கள் வாங்கும் போக்கு அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com