ராம் பாபூ
ராம் பாபூ  File image
இந்தியா

அன்று நிலத்தில் வேலை செய்த கூலி தொழிலாளி; இன்று ஆசிய விளையாட்டில் சாதனை வீரர்! யார் இந்த ராம் பாபூ?

PT WEB

உலகின் 19 வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சேவ் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் கலந்து கொண்ட உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராம் பாபூ என்பவர் தேசிய அளவிலான சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்காண 35 கி.மீ நடை பந்தய போட்டியில் பந்தய நடை தூரத்தை 2 மணி நேரம் 36 நிமிடம் 34 வினாடிகளில் கடந்து சாதனையை படைத்துள்ளார். இவருடைய சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த சாதனையை படைப்பதற்கு முன் பல்வேறு கஷ்டங்களையும், தடைகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் பாபூ கடந்து வந்த பாதை

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ராடிடில் உள்ள பஷிவாரா கிராமத்தை சேந்தவர் ராம் பாபூ. இவருடைய தந்தை ஒரு கூலி தொழிலாளி. இவர்களுக்கு சொந்தமாக நிலங்கள் இல்லாததால் கூலி வேலை செய்து இவருடைய தந்தை குடும்பத்தை நடத்தி வருகிறார். ராம் பாபுவிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் தனது தந்தையுடன் ஒரு மாதங்கள் வரை விவசாய வேலைகளை செய்து வந்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திலும் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு முன் இவர் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் "புத்தயா சிங் - ரன்டு ரன்" என்ற திரைப்படத்தை பார்த்த போது விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய ராம் பாபூ, " நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். என்னோட அப்பா ஒரு கூலி தொழிலாளி. என்னோட அம்மா இல்லத்தரசி. எனக்கு 3 தங்கைகள் இருகாங்க. எங்களுக்கு என்று சொந்தமாக விவசாய நிலங்கள் எதுவும் இல்ல. எங்க வீட்ல அடி பம்பு இல்ல. அதனால என்னோட அம்மா1 கிமீ தூரம் வரை நடந்து போய் தான் தண்ணீர் கொண்டு வருவாங்க. நான் ஹோட்டல் வேலை பார்த்துருக்கேன். இந்த வேலை பார்த்தால யாரும் எங்கிட்ட பேசல. அதற்கு பிறகு அந்த வேலை விட்டு வந்துவிட்டேன். நான் முதன் முதலாக பயிற்சி ஆரம்பித்த போது எனக்கு காலில் பயங்கரமா காயம் ஏற்பட்டது. அது குணமாக ரொம்ப மாசம் ஆகிட்டு. எனக்கு பயிற்சி கொடுக்க யாரும் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் நடந்த ஓலிம்பிக் போட்டியில கலந்துக்கிட்ட "பசந்த பகதூர் ராணா" என்பவர் பத்தி கேள்வி பட்டு அவரிடம் பயிற்சி பெற்றேன். அதே போல் போட்டி நடக்கும் பகுதிகளுக்கு என்னோட சொந்த பணத்துல தான் நான் போயிட்டு வருவேன். நான் ஒருமுறை ராணுவத்தில் பணிபுரிய விண்ணப்பம் அனுப்பி இருந்தேன். ஆனால் பணி கிடைக்கல இதற்கு பிறகுதான் பணி தேட தொடங்கனும்" என்றார்.

மேலும் இவர் தேசிய அளவில் சாதனை படைத்த பிறகு, ஏற்கனவே இவர் கூலி வேலை பார்க்கும் போது எடுத்த வீடியோ ஒன்றை தன்னோட எக்ஸ் இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமுகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.