bengalore
bengalore twitter
இந்தியா

பெங்களூரு: இணையத்தில் வைரலாகும் To-Late விளம்பரம்... சுவாரஸ்யமான பின்னணி!

Prakash J

இந்தியாவில், வேலைக்காக நாளுக்கு நாள் வெளியூர் மற்றும் மாநிலங்களுக்குச் செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ நகரங்களான டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் பெருமளவு சென்று வேலை பார்த்து வருகின்றனர். இதன்காரணமாக, மெட்ரோ நகரங்களின் நிலத்தின் மதிப்பு வெகு வேகமாக உயர்ந்துவருகிறது. குறிப்பாக, இங்கு ரியல் எஸ்டேட் வர்த்தகமும், வீட்டு வாடகையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதனால் வீடு மற்றும் அலுவலக புரோக்கர்கள் காட்டில் பணமழைதான்.

அந்த வகையில், பெங்களூருவில் மரம் ஒன்றில் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒட்டப்பட்டிருக்கும் காகித விளம்பரத்தில் Tolet என்பதற்குப் பதிலாக ToLate என எழுதப்பட்டுள்ளது. இதில் எழுத்துப் பிழை இருப்பதாக எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், எக்ஸ் தள பயனர் ஒருவர், இப்படத்தைப் பகிர்ந்து பெங்களூவின் உண்மையை எடுத்துரைத்துள்ளார். அவர், "பெங்களூருவில் உள்ள நல்ல மலிவான வீடுகளுக்கு நீங்கள் எப்போதும் தாமதமாக வருகிறீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பலரும் பல்வேறு பதிவுகளைப் பதிந்து வருகின்றனர்.

ஒருசிலர், ‘பெங்களூருவில் வீடு தேடுவதே பெரிய வேலை; அதிலும் மலிவான கட்டணத்தில் வீடு தேடுவது என்பது மிகவும் சவாலான காரியம். அப்படியிருக்கையில் பெரும்பாலும் விடப்படும் வாடகை வீடுகளை உடனே தேர்ந்தெடுத்து குடியேற வேண்டும். அதைவிட்டால் சிரமம்தான். அப்புறம் மீண்டும் தேட வேண்டும். இதனால் கால தாமதம் ஆகிறது. இதைக் குறிக்கும்வகையிலேயே அந்த விளம்பரம் வைக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகையால், இதில் எழுத்துப் பிழை அல்ல; உண்மைச் சம்பவமே உணர்த்தப்பட்டுள்ளது என்பது பெரும்பாலனவர்களின் கருத்தாக இருக்கிறது.

இதையும் படிக்க: I-N-D-I-A கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? திட்டவட்டமாக நிலைப்பாட்டை தெரிவித்த மம்தா, கார்கே!