priya nair x page
இந்தியா

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் | தலைமை நிர்வாக அதிகாரியாக பிரியா நாயர் நியமனம்!

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரியா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

PT WEB

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரியா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். 92 ஆண்டுகால நிறுவனத்தின் வரலாற்றில், ஒரு பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும். 1995ஆம் ஆண்டு HUL இல் இணைந்த இவர், வீட்டுப்பராமரிப்பு, அழகு, நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு வணிகங்களில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பதவிகளை வகித்தார். 2023ஆம் ஆண்டு முதல் பிரியா, யூனிலீவரின் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களில் ஒன்றான அழகு மற்றும் நல்வாழ்வின் தலைவராக பதவி வகித்தார்.

priya nair

இந்நிலையில், தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ரோஹித் ஜாவா தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவியை விட்டு விலகுவதால், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அப்பதவியில் பிரியா நாயர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையைப் பற்றிய ஆழமாக புரிதல் கொண்டுள்ள பிரியாவின் செயல்பாடு மூலம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என அந்நிறுவனத்தின் தலைவர் நிதின் பரஞ்பே தெரிவித்துள்ளார்.