ஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

ஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!
ஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

லக்னோவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 77 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. அசிஸ்டெண்ட் (Admin/ Accounts) 
2. அசிஸ்டெண்ட் (Q.C./ Inspection/Commercial) 
3. அசிஸ்டெண்ட் (Civil Works)
4. ஆபரேட்டர் (Fitter / Electrician/ Electronics / Mechanic / Instrument Mechanic)

காலிப்பணியிடங்கள்:
1. அசிஸ்டெண்ட் (Admin/ Accounts) - 10
2. அசிஸ்டெண்ட் (Q.C./ Inspection/Commercial) - 32
3. அசிஸ்டெண்ட் (Civil Works) - 01
4. ஆபரேட்டர் (Fitter / Electrician/ Electronics / Mechanic / Instrument Mechanic) - 34
மொத்தம் = 77 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 30/01/2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13/02/2019, இரவு 11.45 மணி

வயது வரம்பு: (01.01.2019 க்குள்)
UR - 28 வயது, எஸ்.சி / எஸ்.டி - 33 வயது, ஓபிசி (NC) - 31 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம்: ரூ. 200
எஸ்.சி, எஸ்.டி, PWD, முன்னாள் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றோர் போன்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த
தேவையில்லை

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
எஸ்.பி.ஐ வங்கியின் Internet Banking/ Debit Card/ Credit Card/ Bank e-Challan - இல் மட்டுமே
தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
செலுத்திய தேர்வுக் கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.

சம்பளம்: 
1. அசிஸ்டெண்ட் பணிக்கு, மாதம் ரூ.11,050 முதல் ரூ.28,980 வரை
2. ஆபரேட்டர் பணிக்கு, மாதம் ரூ.10,750 முதல் ரூ.27,670 வரை

கல்வித்தகுதி:
1. அசிஸ்டெண்ட் (Admin/ Accounts) என்ற பணிக்கு, எம்.காம் என்ற முழுநேர பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. அசிஸ்டெண்ட் (Q.C / Inspection/ Commercial) என்ற பணிக்கு, 3 வருட டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்ற முழுநேர படிப்பை முடித்திருக்க வேண்டும். 
3. அசிஸ்டெண்ட் (Civil Works) என்ற பணிக்கு,  3 வருட டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் என்ற முழுநேர படிப்பை முடித்திருக்க வேண்டும்.  
4. ஆபரேட்டர் (Fitter / Electrician/ Electronics / Mechanic / Instrument Mechanic) என்ற பணிக்கு, பத்தாம் வகுப்பு முடித்து, 2 வருட ஐடிஐ பிரிவில் Fitter / Electrician/ Electronics / Mechanic / Instrument Mechanic முடித்திருக்க வேண்டும்.  

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (http://www.hal-india.co.in/) - இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற 
https://hal-india.co.in/Common/Uploads/Resumes/991_CareerPDF1_NOTIFICATION%20RECTT.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com