மழை, வங்கதேசம் எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES | 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் வங்கதேச பதற்றம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் வரை விவரிக்கிறது.

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் வரை விவரிக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்... சிவகங்கை, விருதுநகர், தென்காசி

மற்றும் தேனியிலும் கனமழை பெய்யக்கூடும்; நவம்பர் 23 வரை மழை தொடரும்...

வரும் 22ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழக கடலோர மாவட்டங்களில் 21, 22 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என கணிப்பு...

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளில் இன்று முதல் ஈடுபடப் போவதில்லை... பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி வருவாய்த் துறை ஊழியர்கள் அறிவிப்பு...

தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்து கட்சிகளும் விரும்புவதாக அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா பேட்டி... வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சியே அமையும் என்றும் நம்பிக்கை...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் மேலும் தீவிரமடைந்தது போராட்டம்... வன்முறையாளர்களை கண்டவுடன் சுட காவல் துறை உத்தரவு...

பிஹாரில் புதிதாக அமையும் அமைச்சரவையில் பாஜகவுக்கு 16 அமைச்சர்கள் ஒதுக்கீடு எனத் தகவல்... நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி உட்பட 14 அமைச்சர் பதவிகள் ஐக்கிய ஜனதா தளத்திற்கு தரவும் முடிவு...

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு... தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வுக் கூட்டத்தில் முடிவு...

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது, தேசிய புலனாய்வு முகமை... பயங்கரவாதி உமருடன் இணைந்து கைதான ஜசீர் பிலால் வானி சதித்திட்டம் தீட்டியதாக தகவல்...

மெக்கா விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை... பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரகங்கள் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் ஜெய்சங்கர் பதிவு...