முதலமைச்சர் ஸ்டாலின் - அமித்ஷா fb
இந்தியா

HEADLINES | தமிழக அரசு மீதான அமித் ஷா விமர்சனம் to 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, தமிழக அரசு மீதான அமித் ஷா விமர்சனம் முதல் 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் வரை விவரிக்கிறது.

PT WEB

பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரொக்கப்பரிசு அறிவிப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனவும் உதயநிதியை முதல்வராக்கும் மு.க. ஸ்டாலினின் கனவு நிறைவேறாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்றும், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடும் அவல நிலை நிலவுவதாக அமித் ஷா விமர்சனம்.

அமித் ஷா

திமுக கடைபிடிப்பது போலி மதச்சார்பின்மை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு... பிஹார், திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தமிழகத்திலும் வீசும் என நம்பிக்கை...

தமிழகத்தில் முதல்வரே பொய் சொல்லும் அவல ஆட்சி நடப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு... கல்லா கட்டுவதில்தான் தமிழகம் நம்பர் ஒன் என்றும் விமர்சனம்...

கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஐ.டி.ஐ. மாணவர்கள் உள்பட 10 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் என தமிழக அரசு தகவல்...

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்... அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கை...

சீமான்

ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்ற அறிவிப்பு விஜயின் பெருந்தன்மையை காட்டுவதாக சீமான் கருத்து... விஜய் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் திடீர் மாற்றம்...

பெரியாரை வீழ்த்த நினைப்பவர்களுக்கு சீமானின் அரசியல் ஏதுவாக அமைய கூடாது என திருமாவளவன் வலியுறுத்தல்... தன்னை இளம் தலைமுறைக்கு ஒரு பெரியார் என்று கூறியதற்காக நன்றி தெரிவித்த திருமாவளவன்...

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9 லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பம்... பெயர் நீக்குவதற்கு 13 ஆயிரத்து 457 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்...

12 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்... தென்மாவட்டங்களில் இருந்து படையெடுத்த வாகனங்களால், சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல்...

மழை

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி வரை மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணிப்பு... வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்...

2036இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது... தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு...

வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கியூபா, கொலம்பியாவை குறி வைக்கும் ட்ரம்ப்... போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக அண்டை நாடுகள் மீது மறைமுக குற்றச்சாட்டு...

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது... அரசியல் வசனங்களுடன் வெளியான காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு...

அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வரும் 23ஆம் தேதி மறுவெளியீடு... அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்...