இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 29ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு முதல், விண்ணில் பாயும் பாகுபலி ராக்கெட் வரை விவரிக்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், 29ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு... 27ஆம் தேதி வரை அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் கணிப்பு..
அமெரிக்காவின் ப்ளூ பேர்ட் செயற்கைகோளை சுமந்தபடி இன்று விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்... இறுதிக்கட்ட பணிகளை கண்காணிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்...
மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, அந்தமானில் எஸ்ஐஆருக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு... சுமார் 95 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் அதிர்ச்சி...
வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்... அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு...
விஜய் தனியாக நிற்பதைவிட அனைவரும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே வெற்றி எளிதாகும்... பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து...
கே.பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெறும்... என பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி.
தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி கே.பழனிசாமி சம்மதம்... பாஜகவே பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளட்டும் என்றும் நிபந்தனை...
2027ஆம் ஆண்டுக்குள் தைவானை கைப்பற்றும் முயற்சியில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா எச்சரிக்கை... தங்கள் மீது அவதூறு பரப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கைவிட வேண்டுமென சீனா பதிலடி...
லண்டனில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு... பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின்போது, தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததாக புகார்...
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி... ஷஃபாலி வர்மாவின் அதிரடியால் 11.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி அசத்தல்...