gold, mahatama gandhi x page
இந்தியா

HEADLINES | ஒரு லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை முதல் 100 நாட்கள் திட்டத்தின் எதிர்ப்பு வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது ஒரு லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை முதல் 100 நாட்கள் திட்டத்தின் மாற்றங்கள் மற்றும் எதிர்ப்பு வரை விவரிக்கிறது.

Prakash J

இன்றைய தலைப்புச் செய்தியானது ஒரு லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை முதல் 100 நாட்கள் திட்டத்தின் மாற்றங்கள் மற்றும் எதிர்ப்பு வரை விவரிக்கிறது.

  • இந்திய பிரதமர்-ஜோர்டான் மன்னர் சந்திப்பில், இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த 8 அம்ச தொலைநோக்குத் திட்டங்கள் முன்வைப்பு...

  • வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது... ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கு விற்பனை...

  • 100 நாட்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டம்... மகாத்மா காந்தி பெயர் நீக்கம் என பரவிய தகவலுக்கு பாஜக வட்டாரங்கள் மறுப்பு...

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு சமஸ்கிருத பெயரை வைக்க எதிர்ப்பு.... ‘விக்சித் பாரத் கிராமின்’ என பெயர் சூட்டியதற்கு தமிழக எம்.பி.க்கள் கடும் கண்டனம்...

  • 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்... முதல்நாளிலேயே 1,237 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றதாக தகவல்..

நயினார் நாகேந்திரன்
  • மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் வேட்பாளர் உத்தேச பட்டியலை வழங்கவில்லை... தமிழகத்தில் 3ஆவது அணி வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் டெல்லியில் நயினார் நாகேந்திரன் பேட்டி...

  • இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது; திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை... டெல்லியில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்த பின்னர் செல்வப்பெருந்தகை பேட்டி...

  • ராமதாஸுடன் அன்புமணி சேர்ந்தால் பாமகவில் இருந்து விலகத் தயார் என ஜி.கே.மணி அறிவிப்பு.. அன்புமணி துரோகிகள் என குறிப்பிடும் அனைவரும் பதவியை ராஜிநாமா செய்யவும் தயார் என பேச்சு...

  • தேமுதிக சார்பில் ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு... தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியீடு...

  • டிசம்பர் 27ஆம் தேதி கூடுகிறது நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு.... சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் என சீமான் அறிவிப்பு...