ஞானேஷ்குமார் முகநூல்
இந்தியா

இந்தியாவின் 26ஆவது தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்!

நாளை முறைப்படி பதவியேற்க இருக்கும் ஞானேஷ்குமார், 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

இந்தியாவின் 26ஆவது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி ஞானேஸ்வர் குமார் பெயரை அறிவித்துள்ளது.

நாளை முறைப்படி பதவியேற்க இருக்கும் ஞானேஷ்குமார், 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஞானேஸ்வர் குமார்

1988 ஆவது பேட்ச் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ்குமார், கேரள மாநில நிதித் துறை, பொதுப் பணித் துறைகளின் செயலாளர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இதையடுத்து, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட ஞானேஷ் குமார், மத்திய உள் துறை, பாதுகாப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி உள்ளார். கடந்த ஜனவரி 31ஆம் தேதியுடன் பணிஓய்வு பெற்ற நிலையில், அவர் தலைமை தேர்தல் ஆணையராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், 1989ஆவது பேட்ச் ஹரியானா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான விவேக் ஜோஷி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.