உத்தராகண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த குஜராத் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக பேசிய குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல், பொதுசிவில் சட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை தயார் செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இந்த குழு ஆலோசனை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு 45 நாட்களில் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும், அதன் அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறினார். அசாம் மாநில அரசும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த ஆலோசித்து வருகிறது. முன்னதாக நாட்டிலேயே முதல் மாநிலமாக பொதுசிவில் சட்டத்தை பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.