அதிவேகமாக சென்ற ரயில்
அதிவேகமாக சென்ற ரயில் pt web
இந்தியா

பஞ்சாப் | சுமார் 70 கி.மீ-க்கு 100 கிமீ வேகத்தில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்

Angeshwar G

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டது. சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி ரயில் வேகமாக பயணித்தது. கதுவா ரயில்நிலையத்தில், பணியாளர்கள் மாற்றத்திற்காக, ரயிலின் ஓட்டுநரும் துணை ஓட்டுநரும் நிறுத்தியுள்ளனர். ரயிலை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் இறங்கிய நிலையில், சரிவு காரணமாக ரயில் கிளம்பியதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்வதாகக் கூறப்படும் ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. முதற்கட்ட விசாரணையில், சரக்கு ரயில் இன்ஜினில் HANDBRAKE-ஐ இழுக்க மறந்து, ஓட்டுநர் இறங்கிச் சென்றதால் ரயில் தானாக புறப்பட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை போட்டு ரயிலை நிறுத்தியுள்ளனர். என்றாலும் கூட அதிவேகமாக சென்ற ரயில், அதற்குள்ளாகவே 5 ரயில் நிலையங்களைக் கடந்திருந்தது.

ஜலந்தர்-பதான்கோட் வழித்தடத்தில் உள்ள அனைத்து க்ராசிங்குகளும் விபத்தைத் தவிர்ப்பதற்காக உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக உயிர்ச்சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை என தெரிவித்துள்ள ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள், விசாரணை நடைபெறுவதாக கூறினர்.