செய்தியாளர் - M.மீரா
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 20) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் (8கிராம்) தங்கத்தின் விலை ரூ.3,760 சரிந்து ரூ.92,080 ஆக உள்ளது.
அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் ரூ.512 குறைந்து ரூ.12,557-க்கும், ஒரு சவரன் ரூ.4,096 குறைந்து ரூ.1,00,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 மற்றும் 24 காரட் தங்கத்தைத் தொடர்ந்து 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் ரூ.385 குறைந்து ரூ.9,420 ஆகவும், ஒரு சவரன் ரூ.3,080 குறைந்து ரூ.75,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை மட்டுமின்றி வெள்ளியின் விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.175-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,75,000 ஆக உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டின் விலையும் ஒரே நாளில் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் மத்தியில் இன்றைய விலை நிலவரம் கவனம் பெற்றுள்ளது.