தங்கம் AI
இந்தியா

1947 - 2026 | தங்க விலை 80 ஆண்டுகளில் 1711 மடங்கு உயர்வு.. கடந்து வந்த பாதை!!

1947 - 2026 வரை.. 80 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடந்து வந்த பாதை.

PT WEB

1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, 10 கிராம் தங்கம் வெறும் 88.62 ரூபாய் மட்டுமே இருந்தது. நாட்டின் 80-வது சுதந்திர தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டிருக்கும் நிலையில், தங்கத்தின் விலை 1,711 மடங்கு உயர்ந்து, 10 கிராம் 1,51,594.68 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. 1947-இல் நீங்கள் செய்த 1,000 ரூபாய் முதலீடு, இன்று 17.1 லட்சம் ரூபாயாகப் பெருகியிருக்கும்.

தங்கம் விலை

1950-இல் 99.18 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கம், 1980-இல் 1,330 ரூபாயைக் கடந்தது. 2000-ஆம் ஆண்டில் 4,473.60 ரூபாயாக இருந்த விலை, 2020-இல் 48,723.22 ரூபாயாக உயர்ந்தது. அதேபோல, 1970- இல் கிலோ 536.08 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 370 மடங்கு உயர்ந்து இன்று 1,98,461 ரூபாயாக உள்ளது. வெள்ளியும் வளர்ச்சி கண்டாலும் தங்கமே அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இடைப்பட்ட ஆண்டுகளில் சில சரிவுகள் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் மிகப்பெரிய லாபத்தை அளிக்கும் முதலீடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.