இந்தூர் முகநூல்
இந்தியா

மத்தியப்பிரதேசம்: யாசகம் செய்வோர் மீதும் இனி வழக்குப்பதிவு...? காவல்துறை எச்சரிக்கை!

யாசகம் போடுபவர்கள் மீதும் வழக்குப்பதியப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

PT WEB

மத்தியப்பிரதேசம் இந்தூரில் யாசகம் எடுப்பவர்கள் பெருகிவிட்ட நிலையில் அதை கட்டுப்படுத்த நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனாலும் யாசகம் பெறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக “வரும் ஆண்டு ஒன்றாம் தேதி முதல் பணத்தையோ, உணவையோ யாசகமாக அளிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும்” என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் தெரிவித்துள்ளார்.

யாசகம் எடுப்பது தடுக்கப்படுவதால் பாதிக்கப்படுபவர்களுக்கு மறுவாழ்வு தர ஏற்பாடு செய்து தரப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். இந்தியாவில் 10 நகரங்களை யாசகம் பெறுவோர் இல்லாத நகரங்களாக மாற்ற மத்திய சமூக நீதித்துறை திட்டமிட்டுள்ளது. அதில் இந்தூரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.