காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

தலைப்புச் செய்திகள் | மீனவர்கள் குறித்து பேசிய பிரதமர் முதல் ஜார்ஜியாவில் ஏற்பட்ட விஷவாயு கசிவு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீனவர்கள் குறித்து பேசிய பிரதமர் To ஜார்ஜியாவில் ஏற்பட்ட விஷவாயு கசிவு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அணுக வேண்டும் என இலங்கை அதிபர் அநுர குமார திஷநாயகவிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.

  • மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி, இலங்கை அதிபரிடம் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு. தமிழக மீனவர்களை விடுவிப்பது, படகுகளை திருப்பி அனுப்புவது குறித்து பரிசீலிக்குமாறு அதிபர் அநுர குமார திஷநாயகவுக்கு கோரிக்கை.

  • டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என மதுரை அரிட்டாபட்டி கிராம மக்கள் முடிவு.

  • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல். இந்நிலையில், மக்கள் விரோத அராஜக போக்கினை ராகுல் காந்தி முறியடிப்பார் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி.

  • போச்சம்பள்ளி அருகே வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு. இந்நிலையில், இரும்பு பெட்டியில் வெடி பொருள் இருந்ததா என காவல்துறையினர் விசாரணை.

  • ஆண்டாள் கோயில் விவகாரத்தில், நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புவதாக இளையராஜா ஆதங்கம். எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல; விட்டுக்கொடுக்கவும் இல்லை என்றும் விளக்கம்.

  • இளையராஜாவே இசைக்கடவுள்தான், அவர் கோயிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என நடிகை கஸ்தூரி கருத்து.

  • விஜய் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என அழுத்தம் கொடுத்ததா திமுக? என்ற கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டமாக மறுப்பு.

  • வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • தேனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் எலிவால் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு. ஆர்ப்பரிக்கும் அருவியை கண்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்.

  • புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேட்டி.

  • கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதி பாஷா உயிரிழப்பு. உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்.

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த புகார்களில் எந்த முகாந்திரமும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜியின் கருத்தால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு.

  • ஜார்ஜியாவில் உணவகத்தில் விஷவாயு கசிந்ததில் இந்தியர்கள் 11 பேர் உயிரிழப்பு. உடல்களை தாயகம் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூதரகம் விளக்கம்.

  • கனடா துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பதவி விலகல்.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் மாற்றியமைப்பு. செயலாளர் அனு ஜார்ஜ் 136 நாட்கள் விடுமுறையில் செல்வதால் மாற்றியமைத்த தமிழ்நாடு அரசு.

  • முதல்வரின் காலை உணவு திட்டத்தால் 90 விழுக்காடு குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு என மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com