கெளதம் அதானி
கெளதம் அதானி ட்விட்டர்
இந்தியா

மீண்டும் 100 பில்லியன் டாலரைத் தாண்டிய சொத்து மதிப்பு: ஒரேவருடத்தில் சரிவை மீட்ட கெளதம் அதானி!

Prakash J

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடம்

ஒரேவருடத்தில் மீண்டும் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரைத் தாண்டியிருக்கிறது. ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக 2.7 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளது. இதன்மூலம் இவரின் மொத்த சொத்து மதிப்பு 100.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

அதானி குழுமம்

இதன்காரணமாக, உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 12ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11ஆவது இடத்தில் இருக்கிறார். அவரது முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் கடந்த வாரம் லாபத்தில் 130% உயர்வைக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று, எட்டாவது நாளாக அதானி குழும பங்குகள் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே அவருடைய பங்குகள் உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது.

இதையும் படிக்க: மியானமர் ஊடுருவல்: மணிப்பூர் எல்லையில் வேலி: எதிர்ப்பு தெரிவிக்கும் குக்கி இன மக்கள்!

ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிந்த பங்குகள்

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க நிறுவனம், கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனால் அதானி குழுமப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியடைந்தன. ஒரு மாதத்திலேயே அதானியின் சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் சரிந்தது. அதானியின் சொத்து மதிப்பு 37.7 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதானி மீதான குற்றச்சாட்டு இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பியது.

கெளதம் அதானி

பிரதமர் மோடி உடனான அதானியின் நெருக்கம், அதானிக்காக பாஜக அரசின் பாரபட்சம் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் கிளப்பின. பின்னர் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த பதில், இலங்கை துறைமுகத்திற்கு அமெரிக்க நிதி அமைப்பு கொடுத்த கடன் சான்றிதழ், 5 மாநில தேர்தல் முடிவுகள், 2024 தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஆகியன அதானி நிறுவனப் பங்குகளுக்குச் சாதகமாக மாறி, தற்போது அதிலிருந்து மீண்டெழுந்து வருவதுடன், மீண்டும் அசுரவளர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.