rain ani
இந்தியா

ஆரஞ்சு அலெர்ட் to ரெட் அலெர்ட்.. அடுத்த 3-4 நாட்களுக்கு கனமழை.. வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

வடமாநிலங்களில் அடுத்த 3-4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், டெல்லி- NCR-க்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Rishan Vengai

இந்திய வானிலை ஆய்வு மையம் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும். உத்தரபிரதேசத்தில் 3-4 நாட்கள் கனமழை தொடரும். பஞ்சாப், ஹரியானா, பீகாரில் கனமழை நிலவும். டெல்லி-NCR பகுதியில் இன்று ஆரஞ்சு அலர்ட், சில இடங்களில் நாளையும் லேசான மழை, பின்னர் வானிலை தெளிவாகும் என கூறப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வாளர் நரேஷ் யாதவ் கூறுகையில், அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேசத்தில் மிக கனமழை பெய்யும். நாளையும் சில இடங்களில் கனமழை தொடரும்.

rain

உத்தரபிரதேசத்தில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி-NCR-ஐ பொறுத்தவரை, இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மழை பொழிவு இன்றுடன் குறையும் என்றாலும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு வானிலை தெளிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரிலும் வரும் நாட்களில் கனமழை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.