கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான 101 வயது நிறைந்த வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு, கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத்திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நிபுணர்கள் குழுவின் பராமரிப்பில் உள்ள அவரது உடலை, உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். வயது முதிர்வால் அச்சுதானந்தனின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
எனினும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது சிறூநீரக செயல்பாடு மோசமாகியுள்ளதாகவும், ரத்த அழுத்தமும் சீராக இல்லையென்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், முன்னாள் முதல்வரின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.