திருப்பதியில் லட்டு விநியோகக் கவுன்ட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள 47 ஆவது கவுன்ட்டரில் UPS-இல் ஏற்பட்ட கோளாறால் திடீரென தீ ஏற்பட்டது.
லட்டு விநியோக கவுண்டரில் இருந்து கரும்புகை வெளிவருவதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தேவஸ்தான மின்துறை அதிகாரிகள் மின்விநியோகத்தை நிறுத்தி, யு பி எஸ் இணைப்பை துண்டித்து தீ விபத்தை தடுத்து நிறுத்தினர்.