model image pt
இந்தியா

தொகுதி மறுவரையறை: சுட்டிக்காட்டும் பொருளாதார புள்ளிவிவரங்கள்!

தொகுதி மறுவரையறை பிரச்சினையானது வெறுமனே தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் பிரச்சினை அல்ல... பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் செயல் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

PT WEB

தொகுதி மறுவரையறை பிரச்சினையானது வெறுமனே தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் பிரச்சினை அல்ல... பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் செயல் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இம்மாநிலங்கள் தெற்கு - வடக்கு பிரிவினையை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த விவாதத்தை தெற்கு - வடக்கு பிரிவினை என்பதாக சுருக்குவது தவறானது என்றும் இது பிராந்தியங்களை பாரபட்சமாக நடத்துவது குறித்த விவாதம் என்றும் பொருளாதார புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

model image

1961இல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களின் தனிநபர் வருமானம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்துடன் ஒப்பிடத்தக்க அளவில்தான் இருந்தன. ஆனால், இப்போது தேசிய சராசரியைவிட, தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களின் தனிநபர் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களின் தனிநபர் வருமானம் கடுமையாக சரிந்துள்ளது. மற்றொரு புறம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தின. ஆனால், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவில்லை. அந்த வகையில் தற்போதைய மக்கள் தொகையின் படி, தொகுதி மறுவரையறை செய்யப்படுவது என்பது, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி பொருளாதார ரீதியாக மேம்பட்ட மாநிலங்களுக்கு இழைக்கும் அநீதி என்று பொருளாதார புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.