drass ladakh x page
இந்தியா

லடாக்கின் நுழைவு வாயில் 'டிராஸ்'.. குளிர்காலத்தில் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் 3 பகுதிகள்!

லடாக்கின் நுழைவு வாயில் 'டிராஸ்'... இந்தியாவில் 3 நகரங்கள் கடும் குளிர்காலத்திலும், சுற்றுலாவாசிகளுக்கு விருப்பமான இடங்களாக திகழ்கின்றன.

PT WEB

இந்தியாவில் 3 நகரங்கள் கடும் குளிர்காலத்திலும், சுற்றுலாவாசிகளுக்கு விருப்பமான இடங்களாக திகழ்கின்றன.

இந்தியாவில் 3 நகரங்கள் கடும் குளிர்காலத்திலும், சுற்றுலாவாசிகளுக்கு விருப்பமான இடங்களாக திகழ்கின்றன. அதில் முதலாவது லடாக்கின் நுழைவு வாயில் எனப்படும் டிராஸ் பகுதி. இங்கு குளிர்காலத்தில் மைனஸ் 25 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை செல்கிறது. பனிக்காலத்தில் உறைந்த நீரோடைகள், பனி போர்த்திய பள்ளத்தாக்குகள் மற்றும் மரங்கள் என கனவு உலகம்போல் காட்சியளிக்கும் டிராஸ் சூழலை அனுபவிக்கவே சுற்றுலாவாசிகள் இங்கு குவிகின்றனர். இப்பகுதியில், கார்கில் போர் நினைவுச் சின்னம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த இடத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கு உள்ளது.

drass ladakh

இந்தப் பள்ளத்தாக்கு குளிர்காலத்தில், பனிப் பாலைவனம்போல் மாறிவிடும். மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். அப்போது நிலவின் மேற்பரப்புபோல் காட்சியளிக்கும் இப்பகுதியையும், இங்கு நடமாடும் அரிய வகை பனிச்சிறுத்தைகளையும் காண சுற்றுலாவாசிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில், குளிர்காலத்தில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறையும். அப்போது உறைந்த ஏரிகளைக் காண சுற்றுலாப் பயணிகள், இப்பகுதிக்குப் பயணிக்கின்றனர். இங்குதான், இந்தியாவின் மிகப்பெரிய புத்தமடாலயம் அமைந்துள்ளது.