வீட்டுப் பணிகளைச் செய்யும் பெண்மணி ஒருவர், எம்.எல்.ஏவாகி இருப்பது பேசுபொருளாகி உள்ளது. கலிதா மாஜி 1,07,692 வாக்குகள் பெற்று, ஷ்யாமா பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றப் பேரவையில், 206 இடங்களைக் கைப்பற்றிது. இது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டது. இதன்மூலம் மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தவிர, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தனது தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இந்த நிலையில், வீட்டுப் பணிகளைச் செய்யும் பெண்மணி ஒருவர், எம்.எல்.ஏவாகி இருப்பது பேசுபொருளாகி உள்ளது. குஸ்காரா நகராட்சியில் வசிப்பவர் கலிதா மாஜி.
வீடுகளுக்குச் சென்று அங்குள்ள வேலைகளைச் செய்யும் பணியாளாகக் கருதப்பட்ட இவர், மாதந்தோறும் 2,500 ரூபாய் சம்பாதித்து வருகிறார். இத்தகைய சூழலில், ஆஸ்கிராம் தொகுதியில், பாஜக அவரை வேட்பாளராகக் களமிறக்கியது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. கலிதா மாஜி 1,07,692 வாக்குகள் பெற்று, ஷ்யாமா பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முன்னதாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் திரிணாமூல் காங்கிரஸின் அபதானந்த தண்டரிடம் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனினும், அவரை மீண்டும் வேட்பாளராக நிறுத்தி அழகு பார்த்தது. அதன் முடிவு, இன்று உள்ளூர் மட்டுமல்ல, உலகத்துக்கே தேடியைத் தந்திருக்கிறது. இது, அடிமட்டத் தொண்டர்களுக்கும் கட்சி அளிக்கும் ஆதரவையும் நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.