DK சிவக்குமார்
DK சிவக்குமார் முகநூல்
இந்தியா

இமாச்சல் அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கர்நாடக துணை முதல்வர் DK சிவக்குமார்!

PT WEB

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 40 இடங்களை வென்று காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் அம்மாநில காங்கிரஸில் கடந்த சில மாதங்களாகவே, உட்கட்சி பூசல் நடந்து வருகிறது. இதில் உச்சகட்டமாக 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி பாஜக-வுக்கு வாக்களித்தனர். மேலுமொரு அமைச்சர் ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலை உருவானது.

DKShivakumar | Karnataka | Cauvery

இதையடுத்து இமாச்சல அரசில் ஏற்பட்டுள்ள சிக்கலை சமாளிக்க மேலிடப் பார்வையாளர்களாக டி.கே சிவக்குமார் மற்றும் பூபேந்திர சிங் ஹூடா இருவரும் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த இரு தினங்களாக அவர்கள் சிம்லாவில் முகாமிட்டு நிலைமையை சரி செய்யும் வேலைகளில் ஈடுபட்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த டி.கே சிவகுமார், “இமாச்சலில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கும் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அபிஷேக் மனு சிங்வி தோல்விக்கும் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றுக் கொண்டார். ஆகவே இமாச்சல் காங்கிரஸில் இருந்த குழப்பங்கள் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டது.

காங்கிரஸ் கட்சி அடுத்து 5 ஆண்டுகால ஆட்சியை அங்கு நிறைவுசெய்யும். சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய நிர்வாகிகள் என அனைவரிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி குறைகள் மற்றும் வேறுபாடுகள் களையப்பட்டு விட்டன” என்று தெரிவித்துள்ளார்.