model image x page
இந்தியா

ம.பி | “புத்திசாலி குழந்தைகளை பெற்றெடுக்க இதை செய்யுங்கள்” - பள்ளியில் பெண் DIG கருத்தரித்தல் பாடம்!

மத்தியப் பிரதேசத்தில் இளம் வயதினர் புத்திசாலி குழந்தைகளை பெற்றுக் கொள்வது எப்படி என்பது குறித்து அம்மாநில காவல்துறை டிஐஜி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

மத்திய பிரதேச மாநிலம், ஷாஹ்டோலில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் 10 முதல் 12ஆம் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதையை காப்பாற்றுவது குறித்து ’மை ஹூன் அபிமன்யு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காவல் துறை பெண் டிஐஜி சவிதா சோஹானே, புத்திசாலி குழந்தைகளைப் பெறுவது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பி அதற்கு விளக்கம் அளிக்கிறார்.

அதில், ”நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டுவரப் போகிறீர்கள். இதனை நீங்கள் எவ்வாறு திட்டமிட்டிருக்கிறீர்கள்? நான் சொல்வதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் கருத்தரித்தல் கூடாது. அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, நான்காவது புதிய தலைமுறையை உருவாக்க தண்ணீர் அருந்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

model image

கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி பேசிய, இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் எதிர்வினையாற்றியும் வருகிறது. இதற்கு அவர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்துள்ள பதிலில், ”நமது வேதங்கள் மற்றும் ஆன்மிக தத்துவங்களின் மீதான ஈர்ப்பினால்தான் இவ்வாறு கூறுகிறேன். அபிமன்யு திட்டம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. காவல்துறையில் சேருவதற்கு முன்பு, மன அமைதியைத் தேடுவதற்கான ஆன்மிக சொற்பொழிவுகளை பள்ளி மாணவிகளிடம் ஆற்றியுள்ளேன்.

இந்து மதத்தைப் பொறுத்தவரை பௌர்ணமி நாள் என்பது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அதனால் அந்த நாளை குறிப்பிட்டு நான் பேசினேன்.

நான் ஆற்றிய உரை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதில், மாணவிகளுக்கு சுய மரியாதை தேவை என்பதை எடுத்துக்கூறினேன். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்வதை வலியுறுத்தினேன். ஆனால் என் உரையில் ஒரு பகுதி மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இது மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.