திருப்பதி
திருப்பதி  PT
இந்தியா

தங்கம் விலை உயர்ந்தாலும் திருப்பதி கோயிலுக்கு தங்க காணிக்கை குறையவில்லை!

PT WEB

ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலில் நன்கொடையாக மட்டும் கடந்த ஆண்டு ரூபாய் 773 கோடி மதிப்பிலான, 1,031 கிலோ தங்கத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெற்றுள்ளது. 

அதேநேரம் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இருப்பினும் திருப்பதி கோயிலுக்கு தங்கத்தை நன்கொடையாக அளிப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வங்கிக் கணக்குகளில் சுமார் 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான 11,329 கிலோ தங்கம் இருப்பில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 4 டன் அளவிற்கான தங்கத்தை பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதன்படி, சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு டன் அளவிற்கு தங்கத்தை வழங்கியுள்ளனர்.

இந்த தங்கத்தை பல்வேறு வங்கிகளில் திருப்பதி தேவஸ்தானம்
டெபாசிட் செய்துள்ளது. இவைதவிர ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,600 கோடி ரூபாய் உண்டியல்
காணிக்கையாக கிடைத்து வருகிறது. இதன் மூலம் நாட்டிலேயே பெரும் பணக்கார அறக்கட்டளை வரிசையில் திருப்பதி அறக்கட்டளை முன்னணியில் உள்ளது.