தேவேந்திர ஃபட்னாவிஸ் முகநூல்
இந்தியா

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஆகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்... சூடுபிடிக்கும் துணை முதல்வர் Race!

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்காமல் இருந்தது. முன்னதாக சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது.

ஆனால், தற்போது வரை புதிய மாநில அரசு பதவியேற்கவில்லை. இந்த நிலையில்தான், மகாராஷ்டிரா பாஜக எம். எல்.ஏ கூட்டமானது இன்று காலையில் மும்பையில் நடைப்பெற்றது. இதில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்று மாலையில் ஆளுநர் சி,பி,ராதாகிருஷ்ணனை தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்து இதுதொடர்பாக பேசுவார் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி அமைப்பதற்கு உரிமைக்கோருவதற்காக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரை சந்திக்க இருக்கும் சூழலில், இவருடன் தற்போதையை முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவாரும் உடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், துணை முதலமைச்சராக அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் பவா மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவருமே துணை முதல்வர்களாக பதவியேற்பர் என்று கூறப்படுகிறது.