அஜித் பவார் ani
இந்தியா

மகாராஷ்டிரா | கிராமசபைத் தலைவர் சந்தோஷ் தேஷ்முக் படுகொலை.. அஜித் பவாருக்கு முற்றும் நெருக்கடி?

மகாராஷ்டிராவில், படுகொலை செய்யப்பட்ட கிராமசபைத் தலைவர் சந்தோஷ் தேஷ்முக்கின் குடும்பத்தினரைச் சந்தித்த துணை முதல்வர் அஜித் பவார், கொலையாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

PT WEB

மஹாராஷ்டிராவில், படுகொலை செய்யப்பட்ட கிராமசபைத் தலைவர் சந்தோஷ் தேஷ்முக்கின் குடும்பத்தினரைச் சந்தித்த துணை முதல்வர் அஜித் பவார், கொலையாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

அஜித் பவார்

கடந்த 6ஆம் தேதி அன்று பீட் மாவட்டத்தில் உள்ள காற்றாலை தளத்தில் இருந்த காவலாளியை, அண்டை கிராமத்தைச் சேர்ந்த அசோக் குலே, சுதர்ஷன் குலே, பிரதீக் குலே ஆகிய மூன்று நபர்கள் தாக்கினர். காவலாளியைக் காப்பாற்ற முயன்ற தேஷ்முக்கும் தாக்கப்பட்டார். டிசம்பர் 9ஆம் தேதியன்று தேஷ்முக் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

தேஷ்முக் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர், கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இது சாதிய மோதலாகவும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய வால்மீக் கரத் என்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.

இதனால் முண்டேவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று மஹாராஷ்டிர மஹாயுதி கூட்டணி அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருக்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கரத் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.