”இது அம்பேத்கர், பூலேவின் பூமி; மனுதர்மத்திற்கு மராட்டியத்தில் இடமில்லை”- துணை முதல்வர் அஜித் பவார்!

”மனுதர்ம சாஸ்திரத்துக்கு மராட்டியத்தில் இடமில்லை” என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார்
அஜித் பவார்எக்ஸ் தளம்

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது. இக்கூட்டணியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், ‘மனுஸ்மிருதி குறித்த கருத்துகளைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க மாநில அரசு விரும்புகிறது’ என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுகுறித்த கருத்துக்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், "மனுதர்ம சாஸ்திரத்தை மகாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை. மனுதர்ம சாஸ்திரத்திற்கு மகாராஷ்டிராவில் இடமில்லை. மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை. இது அம்பேத்கர், பூலே போன்றோர் பிறந்த பூமி. இவர்களின் முற்போக்குச் சிந்தனைகளைச் செயல்படுத்துவதில் பெயர்பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா. 'மனுஸ்மிருதி குறித்த கருத்துகளைப் பாடத்தில் சேர்க்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க: ”ஒருத்தருக்கு சார்பா நடக்குதா”-ரிசர்வ் டே ஏன் இல்லை? விமர்சனத்தை சந்திக்கும் 2வது அரையிறுதி போட்டி!

அஜித் பவார்
பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - மனுஸ்மிருதி விவகாரத்தில் நீதிமன்றம்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com