டெல்லி விவசாயிகளின் போராட்டம்
டெல்லி விவசாயிகளின் போராட்டம் முகநூல்
இந்தியா

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை... மீண்டும் தொடரவுள்ளது டெல்லி விவசாயிகளின் போராட்டம்!

PT WEB

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் உட்பட பல அம்ச கோரிக்கைகளை இயற்ற வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், ”பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை, குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு விவசாயிகளிடம் இருந்து அரசுத்துறைகளே கொள்முதல் செய்யும் ஐந்தாண்டு திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வல்லுநர்களிடம் ஆலோசிக்க உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், நாளை முதல் டெல்லியை நோக்கிய தங்கள் பேரணி தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.