Renu Chaudhary x page
இந்தியா

”இந்தி கற்கவேண்டும்; இல்லையேல்” - டெல்லி பாஜக கவுன்சிலர் எச்சரிக்கை!

தலைநகர் டெல்லியில், ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது டெல்லியைவிட்டு வெளியேற வேண்டும் என ஆப்பிரிக்க நாட்டவரை பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

தலைநகர் டெல்லியில், ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது டெல்லியைவிட்டு வெளியேற வேண்டும் என ஆப்பிரிக்க நாட்டவரை பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதச்சார்பற்ற நாடாக இருக்கும் இந்தியா மொழிகள் வாரியாக பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே, அவ்வப்போது மொழிகள் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடப்பதுண்டு. இந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில் அம்மொழி திணிக்கப்படுவதாக போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இந்தி திணிப்பு விவகாரம் தற்போது வரை நீடிக்கும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில், ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது டெல்லியைவிட்டு வெளியேற வேண்டும் என ஆப்பிரிக்க நாட்டவரை பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சியில் உள்ளது. முதல்வராக ரேகா குப்தா உள்ளார். இந்த நிலையில், தலைநகர் டெல்லியிலும் மொழிப் பிரச்னை வெடித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

வைரலாகும் அந்த வீடியோவில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, பூங்கா ஒன்றில் கால்பந்து விளையாடும் ஆப்பிரிக்க மக்களை எதிர்கொள்கிறார். அவர்களிடம் இந்தி மொழியில் சத்தமாகப் பேசும் அவர், ”ஏன் இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை” என்று கேள்வி எழுப்புகிறார். பின்னர், ”ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ளவில்லை என்றால், டெல்லியைவிட்டு வெளியேற வேண்டும்” என எச்சரிக்கிறார். அவருடைய இந்தக் கண்டிப்புக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அவர் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினே” என அதில் தெரிவித்துள்ளார்.