டெல்லி சட்டமன்றத் தேர்தல்... ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தல் புதிய தலைமுறை
இந்தியா

டெல்லி சட்டமன்றத் தேர்தல்... ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தல்... முடிசூடப்போவது யார்?

டெல்லி சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முடிசூடப்போவது யார்?

ஜெனிட்டா ரோஸ்லின்

விறுவிறுப்பாக தொடங்கியது... டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

70 தொகுதிகளை கொண்ட நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இதன் வாக்குகள் இன்று காலை 8 மணி் முதல் எண்ணப்பட்டுவருகிறது. வாக்கு எண்ணும் பணியில் 5000 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 19 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது.

  • டெல்லி தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் 60.42.

  • தேர்தல் களத்தில் 603 ஆண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டன.

  • தேர்தலில் மும்முனை போட்டி நிலவினாலும், பாஜக மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

இப்படி கடும் போட்டிக்கு மத்தியில் தலைநகர் டெல்லியின் அரியணையில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் இன்றைய தினம் கிடைத்துவிடும்.

நான்காவது முறையும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் ஆம் ஆத்மியும், இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிடும் முனைப்பில் பாரதிய ஜனதாவும் செயலாற்றின.

முன்னதாக நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏழு இடங்களையும் பாஜக கைப்பற்றிய நிலையில், சட்டமன்ற தேர்தலில் கடந்த இரண்டு முறை அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி வெற்றிபெற்றது. இந்தவகையில், இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளத குறிப்பிடத்தக்கது.

வாக்குவாதத்தில் நாதக வேட்பாளர்!

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நாம் தமிழர் கட்சியின் ஏஜெண்டுகளை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டினை முன்வைத்து காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அனைத்து எதிர்கட்சிகளுமே இந்த தேர்தலை புறக்கணித்தநிலையில், திமுக, நாதக என்று இருமுனை போட்டி நிலவிவரும் நிலையில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணப்படும் என்று கூறப்பட்டநிலையில், 8.20 மணி அளவில்தான் வாக்கு எண்ணிக்கை என்பது தொடங்கப்பட்டுள்ளது.

தொடங்கியது ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8. 20 மணி அளவில் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 67.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணும் அறையில் 14 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 237 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம், ஸ்ட்ராங் ரூம் பாதை, கட்டட வளாகம், சாலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் 78 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் ( 2025) : 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

காலை 8.30 மணி நிலவரப்படி,

பாஜக - 19 இடங்களிலும்

ஆம் ஆத்மி - 16 இடங்களிலும்

காங்கிரஸ் - 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வாக்கு எண்ணும் அதிகாரிகள், காவல்துறையினர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025; தட்டிதூக்கும் திமுக!

காலை 9 மணி நிலவரப்படி:

திமுக 8025 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறது

நாதக 1081 வாக்குகளையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

முன்னதாக, நாதக வேட்பாளரை போன்று திமுக வேட்பாளர் சந்திரக்குமாரும் திமுக ஏஜெண்டை அனுமதிக்கவில்லை என்று கூறி காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

தொடர்ந்து முன்னிலையில் பாஜக! இதுவரை இல்லாத பின்னடைவில் AAP!

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது

பாஜக - 37 இடங்களிலும்

ஆம் ஆத்மி - 27 இடங்களிலும்,

காங்கிரஸ் - 1

மனிஷ் சிசோடியா முன்னிலை. ஜங்புறா பகுதியில் துணை முதல்வர் தற்போது முன்னிலை. இதுவரை பின்தங்கி இருந்த நிலையில், தற்போது சிசோடியா முன்னிலை பெற்றார்.

கடந்த மூன்று டெல்லி சட்டசபை தேர்தல்களில் இல்லாத அளவு AAP பின்னடைவை சந்தித்துள்ளது. டெல்லி முதல்வர், முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் பின்னிலை.

ஈரோட்டில் ஜெட் வேகத்தில் செல்லும் திமுக...நாதக  நிலை என்ன?

காலை 9.30 மணி நிலவரப்படி:

திமுக - 12,003 முன்னிலை

நாதக - 2056

9947 வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.

அதிமுக, தேமுதிக, தவெக ,பாஜக போன்ற கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்தநிலையில், திமுக , நாதகவிற்கு இடையே இருமுனை போட்டி நிலவிவருகிறது. தபால் வாக்கு எண்ணிகையல் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்தநிலையில், மின்னனு வாக்கு எண்ணிக்கையிலும் திமுக முன்னிலை பெற்று வருகிறது.

டெல்லியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?முந்தும் பாஜக... துரத்தும் ஆம்ஆத்மி!

காலை 10 மணி நிலவரம்:

டெல்லி முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், சவுரப் பரத்வாஜ் கிரேட்டர் கலாஷ் தொகுதியிலும், கர்வித் சிங்வி கிரேட்டர் தொகுதியிலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவுக்கான காரணங்கள்

1.⁠ ⁠10 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கேஜரிவால் அரசு மீது அதிருப்தி

2.⁠ ⁠குடிநீர் வினியோகம், சாலைகள் பராமரிப்பு, திடக்கழிவு அகற்றுதல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மோசமாக உள்ளது என மக்கள் கருத்து

3.⁠ ⁠மதுபான கொள்கை ஊழல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது ஊழல் முத்திரை

4. மக்கள் கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட சமயத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் தனக்காக சொகுசு வசந்த மாளிகையை கட்டினார் என குற்றச்சாட்டு

5.⁠ ⁠டெல்லியில் நடைபெற்ற கலவரங்களில் ஆம் ஆத்மி கட்சி குழப்பமான நிலைப்பாடுடன் இருந்ததாக மக்கள் கருத்து

பெரும்பான்மையை தாண்டி முன்னிலையில்... 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்குமா பாஜக?

தேர்தலில் மும்முனை போட்டியாக இருந்தாலும் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே கடுமையான போட்டியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளன.

இந்தவகையில் இதை மெய்ப்பிக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது.

காலை 10 மணி நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை தாண்டி சுமார் 46 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வெறும் 23 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை நிஜமாக்கும் வகையில் டெல்லியில் அமோக வெற்றியை நோக்கி பாஜக நகர்ந்து வருகிறது.

டெல்லியில் பாஜகவா? கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

ஆ.ஆ.க.வின் பல தலைவர்கள் தங்களது சொந்த தொகுதிகளிலேயே பின்னடைவை சந்தித்துள்ளனர். அதற்கு மாறாக, பாஜக முன்னிலையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஈரோட்டில் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா நாதக? யார் யாருக்கு எவ்வளவு வாக்கு?

காலை 11 மணி நிலவரம்:

திமுக - 27600

நாதக - 4298

வாக்கு வித்தியாசம் - 23302

INDIA கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை

டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், “டெல்லியில் பாஜக முன்னிலையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி இந்தளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. INDIA கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. தங்களின் ஈகோ பிரச்னைகளை கட்சிகள் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதற்கான வழியில் சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கட்சிகள் வாங்கிய வாக்குகள் சதவீதம்

டெல்லியில் காலை 11.18 மணி நிலவரப்படி வாக்குசதவீதப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக 46.69%

ஆம் ஆத்மி 43,.48%

காங்கிரஸ் 6.68%

பிற 3.15%

கெஜ்ரிவால் பிம்பம் சிதைந்ததே வாக்குகள் குறைய காரணம்

டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக அன்னா ஹசாரே கூறுகையில், “தேர்தலில் போட்டியிடுபோது வேட்பாளர்களுக்கு நல்ல குணமும்ம், நல்ல யோசனைகளும் இருக்க வேண்டும். அவரது பிம்பத்தில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது. இதை நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினருக்கு அது புரியவில்லை.

அவர்கள் பணம் மற்றும் மது விவகாரத்தில் சிக்கிக்கொண்டனர். அதனால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் பிம்பம் சிதைந்தது. தேர்தலில் வாக்குகள் குறைவாகக் கிடைக்க இதுவே காரணம்.

அரசியலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஆனால், தான் குற்றவாளி இல்லை என்பதை ஒருவர் நிரூபிக்க வேண்டும். உண்மை உண்மையாகவே இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் பின்னடைவு

நியூ டெல்லி தொகுதியில் போட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங்கை விட 1170 வாக்குகள் பின்னைலையில் இருக்கிறார். 9 ஆவது சுற்றின் முடிவில் பர்வேஷ் சாஹேப் 19267 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் 18097 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம்!

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 ; காலை 12 மணி நிலவரப்படி நட்சத்திர வேட்பாட்பாளர்கள் யார் யார் எங்கு முன்னிலை வகிக்கின்றனர்

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025
  • அரவிந்த் கெஜ்ரிவால் AAP - புது டெல்லி - பின்னடைவு

  • மனிஷ் சிசோடியா AAP - ஜங்புரா - முன்னிலை

  • ரமேஷ் பிதுரி BJP - கல்காஜி -முன்னிலை

  • சந்தீப் தீட்சித் CONG - புது டெல்லி - பின்னடைவு

  • இம்ரான் உசேன் AAP - பல்லிமாறன் - முன்னிலை

  • சோம்நாத் பாரதி - AAP -மாளவியா நகர் - பின்னடைவு

  • சத்யேந்தர் ஜெயின் AAP - ஷகுர் பஸ்தி - பின்னடைவு

  • அமானத்துல்லா கான் - AAP - ஓக்லா - முன்னிலை

  • ராஜ் குமார் ஆனந்த் BJP - படேல் நகர் (SC) - பின்

  • கைலாஷ் கெலாட் BJP- பிஜ்வாசன் - முன்னிலை

  • மஞ்சிந்தர் சிங் சிர்சா BJP - ராஜௌரி கார்டன் - முன்னிலை

  • ஃபர்ஹாத் சூரி - CONG - ஜங்புரா - பின்னடைவு

  • கர்னைல் சிங் - BJP - ஷகுர் பஸ்தி - முன்னிலை

  • அதிஷி - AAP - கல்காஜி - பின்னடைவு

  • பர்வேஷ் வர்மா - BJP - புது டெல்லி- முன்னிலை

  • கபில் மிஸ்ரா - BJP - கரவால் நகர்- முன்னிலை

  • அல்கா லம்பா - CONG - கல்காஜி- பின்னடைவு

  • தாஹிர் உசேன் - AIMIM - முஸ்தபாபாத்- பின்னடைவு

  • சௌரப் பரத்வாஜ் - AAP - கிரேட்டர் கைலாஷ்- பின்னடைவு

  • அவத் ஓஜா - AAP- பட்பர்கஞ்ச் - பின்னடைவு

  • கோபால் ராய் - AAP -பாபர்பூர் - முன்னிலை

  • பர்வேஷ் ரத்னா - படேல் நகர் (SC) - AAP - முன்னிலை

  • ராக்கி பிர்லா - AAP - மதிப்பூர் (SC)- பின்னடைவு

  • விஜேந்தர் குப்தா - BJP - ரோகிணி- முன்னிலை

  • தர்வீந்தர் சிங் மர்வா - BJP - ஜங்புரா- முன்னிலை

  • அரிபா கான் ஓக்லா - CONG - பின்னடைவு

பிரதமரின் வார்த்தைகளை மக்கள் நம்பினர்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை நீங்கள் பாருங்கள். டெல்லி மக்கள் பிரதமர் மோடியின் வார்த்தைகளை நம்பியுள்ளனர். இது பிரதமர் மோடியின் தலைமைக்கும், எங்களைப் போன்ற தொண்டர்களை ஊக்கப்படுத்திய கட்சியின் தேசியத் தலைமைக்கும் கிடைத்த வெற்றி. டெல்லியை வளர்ந்த தலைநகராக மாற்ற விரும்புகிறேன் என்பதை மிகவும் பணிவுடன் கூற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நாதகவை தொடரும் நோட்டா

இப்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பரப்பரப்பாக சென்றுகொண்டிருக்கும் ஈரோடு வாக்கு எண்ணும்மையம்.

இதன்படி, முதலாவதாக எண்ணப்பட்ட தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவில் திமுக வேட்பாளர் -197 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். ஆனால், நாதக-13, நோட்டா-8 வாக்குகளும், மற்றவை-15, 31 சுயேட்சை வேட்பாளர்கள் 0 வாக்குகள் பெற்றுள்ளனர். நிராகரிக்கப்பட்டது-18.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

நோட்டா

இதன்படி, தேர்தலில் போட்டியிட்ட யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் விருப்பத்தை பலர் தேர்வு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

3 ஆம் இடம் பிடித்த நோட்டா!

தொடர்ந்து, நான்காம் சுற்று நிலவரப்படி,

திமுக - 31020

நாதக - 6034

நோட்டா-1204

5ம் சுற்று நிலவரம்

திமுக - 37001

நாதக - 7668

நோட்டா - 1584

இரு மடங்காக பதிவான நோட்டா!

நாதக 8 வாக்குகள்... நோட்டா 10 வாக்குகள்...

2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 798 வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தது. 2025 இடைத்தேர்தலில் ஐந்து சுற்றுகள் முடிவில் 1584 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த இடைத்தேர்தலில் பெற்ற மொத்த வாக்குகளை விட இந்த இடைத் தேர்தலில் ஐந்து சுற்றிலேயே இரு மடங்காக பதிவாகியிருக்கிறது நோட்டா வாக்குகள்.

6ம் சுற்று நிலவரம்

திமுக - 43488

நாதக - 9152

நோட்டா - 1645

7 ம் சுற்று நிலவரம்

திமுக- 49312

நாதக - 10587

நோட்டா- 2345

8 ம் சுற்று நிலவரம்

திமுக- 55910

நாதக - 12028

நோட்டா - 2663

அதிக வாக்குகளை பெற்ற நாதக!

மேலும், கடந்த முறை நாம் தமிழர் கட்சி 10827 வாக்குகள் பெற்றிருந்தனர். எட்டாம் சுற்று நிலவரப்படி 10 ஆயிரத்து 897 வாக்குகளை தற்போது பெற்றுள்ளனர். ஆனால், தற்போது கடந்த இடைத்தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது நாம் தமிழர் கட்சி.

நாதகவை பின்னுக்குத்தள்ளும் நோட்டா

நாதக 8 வாக்குகள்... நோட்டா 10 வாக்குகள்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எட்டாவது சுற்று நிலவரப்படி, திமுக வேட்பாளர் சந்திரக்குமார் 55910 வாக்குகளையும், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 12028 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். நோட்டாவுக்கு 2663 வாக்குகள் விழுந்திருக்கின்றன. எட்டு சுற்றுக்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் நோட்டாவுக்கு விழுந்திருக்கும் வாக்குகள், 2021 பொதுத்தேர்தல், 2023 இடைத்தேர்தலில் விழுந்த வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வெற்றியை உறுதி செய்தார் சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியை உறுதி செய்துள்ளார். பதிவானவற்றில் 50% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

11 ஆவது சுற்று நிலவரப்படி சந்திரகுமார் 75 ஆயிரத்து 350 வாக்குகளைப் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமிக்கு 16 ஆயிரத்து 123 வாக்குகள் கிடைத்துள்ளன.

சீமானின் வாதம் சற்றே ஓவராக சென்றுவிட்டதோ என நினைக்கிறேன்

அண்ணாமலை - சீமான்

“ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்களே உற்சாகத்தோடு பங்கெடுக்கவில்லை. நாங்கள் தேர்தலை புறக்கணித்ததால்தான் மக்களை பட்டியில் அடைக்கும் கொடூரம் நடக்கவில்லையோ என நினைக்கிறோம்.,

பெரியாரை புகழ்ந்தாலோ அல்லது தாக்கிப் பேசினாலோ வாக்குகள் விழும் என்ற காலம் எல்லாம் மாறிவிட்டது. பெரியாரைப் பிடிக்கும் மக்களும் இருக்கிறார்கள், பிடிக்காத மக்களும் இருக்கிறார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கையையே மாற்றும் சக்தி அந்த வாதத்திற்கு இல்லை. எனவே, சீமானின் வாதம் சற்றே ஓவராக சென்றுவிட்டதோ என நினைக்கிறேன். ஆபாச பேச்சுக்கள் அளவிற்கு சென்றுவிட்டது. பெரியாரைத் தாண்டி தமிழ்நாடு சென்று வருகிறது” - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை