காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெறும் யுத்தம் முடிவுக்கு வருகிறது
வரும் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர். 8ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று இரவே சென்னைக்கு புறப்பட வேண்டும் என்றும், ஞாயிறன்று இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலெட்சுமி வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
சென்னை சங்கமத்தின் நிறைவு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு. அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை கண்டு ரசித்தார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு. 6 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதில் 4 பேர் மீட்பு. மற்றொரு சிறுமி மாயம்
பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 30 தனிப்படைகள் அமைத்து விசாரணை. குற்றவாளி குறித்து துப்புகள் கிடைத்துள்ளதாக காவல் துறை தகவல்.
டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு. மகளிருக்கு மாதந்தோறும் இரண்டாயிரத்து 500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என வாக்குறுதி.
சித்தராமையா மீதான மூடா முறைகேடு வழக்கில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம். ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை.
காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில், காதலி மற்றும் அவரது மாமா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது கேரள நீதிமன்றம்.
உக்ரைன் உடனான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் உயிரிழப்பு. 16 பேரின் நிலை தெரியவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடிய டொனால்டு ட்ரம்ப். உலகில் அமைதியை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்வோம் என பதிவு.
நிலமோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறை தண்டனை. 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.
ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம் பெற போகும் வீரர்கள் யார்? யார்? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
உலக செஸ் சாம்பியனான குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கும் விருது வழங்கி கெளரவம்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச். அல்காரஸ், ஸ்வெரவ் ஆகியோரும் முன்னேற்றம்.
சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு.
நிலநடுக்கம் குறித்த செய்தியை விட வேகமாக பரவிய கை நடுக்கம் குறித்த செய்தி. மதகஜராஜா வெற்றி விழாவில் நடிகர் விஷால் நகைச்சுவையாக பேச்சு.