சபரிமலை குப்பை
சபரிமலை குப்பைமுகநூல்

பலமுறை வேண்டுகோள் விடுத்தும்... சபரிமலையில் குவியும் குப்பையால் தேவஸ்வம் போர்டு வேதனை!

மகரஜோதி தரிசனத்திற்கு லட்சக் கணக்கில் கூடிய பக்தர்களால் சபரிமலையில் குவிந்த குப்பைகள்... தூய்மைப் பணிகள் தீவிரம்; திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வேதனை!
Published on

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக 18 மலைகள் வனப்பகுதிகள் புடை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலையில் தற்போது மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 14ம் தேதி மகர நட்சத்திர தினத்தன்று மகரஜோதி தரிசனம் மற்றும் மகர சங்கம பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகரிப்பைத் தொடர்ந்து, சபரிமலையில் தடை செய்யப்பட்ட நெகிழி நெகிழிப் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளும் குவிந்தன.

இந்நிலையில் சபரிமலையை சுற்றிலும் உள்ள தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தின் வனவிலங்குகளை பாதுகாக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக தூய்மைப் பணிகள் முடுக்கி விடப்படுள்ளன. கழிவுகளை தரம் பிரித்து அழிக்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

பல முறை வேண்டுகோள் விடுத்தும், இருமுடியில் பன்னீர், கற்பூரம், பத்தி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வருவது ஐதீகம் இல்லை என சபரிமலை தந்திரியே அறிவிப்பு செய்தும், ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து நெகிழி பொருட்கள் உள்ளிட்ட குட்டைகளை சபரிமலைக்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வேதனை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com