மத்தியப்பிரதேசத்தில் காது கேளாத மற்றும் வாய்ப்பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்தது சட்டவிவாதத்தை தூண்டியிருக்கும்நிலையில், அந்த வழக்கில் கைதான குற்றவாளி கொடூரமான குற்றப்பிண்ணனியை கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயதான காது கேளாத, செவித்திறன் இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போனார். காணாமல் போன அடுத்தநாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை கண்ட சிலர், சிறுமிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டிருந்ததை கண்டனர் . எனவே, உடனடியாக அருகிலிருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 8 ஆம் தேதி அச்சிறுமி உயிரிழந்தார். தொடர்ந்து, குற்றவாளி யார் என்று தீவிர ஆலோசனை விசாரணை நடத்தப்பட்டது.
46 இடங்களில் உள்ள 136 கேமராக்களில் இருந்து பெறப்பட்ட சிசிடிவு ஆதாரங்களின் அடிப்படையில் ரமேஷ் சிங் என அடையாளம் காணப்பட்ட நபர், குற்றம் நடந்த இடத்தில் அழைந்து திரிந்தது கண்டறியப்பட்டது. பிறகு பிரயாக்ராஜ் வரை சென்று தீவிர சோதனை நடத்தியதில், குற்றவாளி கும்பமேளாவில் குள்ளிக்க சென்றதும், இறுதியில் ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வருவதும் தெரியவந்துள்ளது.
இந்தவகையில், ரயிலில் வந்த கிட்டதட்ட 400 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் சிக்கிக்கொண்ட ரமேஷ், இறுதியில் தான் செய்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.
பிறகு, இவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், பல கொடூர குற்றங்களை செய்து சுதந்திரமாக நடமாடும் நபர்தான் இந்த ரமேஷ் என்னும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, இவருக்கான மரண தண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
போலாய்கலாவில் உள்ள டாப்ரிபுராவில் வசித்து வருபவர் ரமேஷ் சிங், கடந்த 2003 ஆம் ஆண்டு ஷாஜாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு 2013 ல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.
பிறகு, 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைக் கடத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனால், 2019 ஆம் ஆண்டு தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இதன்பிறகுதான், தற்போது 11 வயது காது கேளாத, வாய் பேசாத சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.