டி.ராஜா எக்ஸ்
இந்தியா

சிபிஐ|25 அகில இந்திய மாநாடு.. 3வது முறையாக தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலராக, மூன்றாவது முறையாக தொடர்ந்து டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

PT WEB

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலராக, மூன்றாவது முறையாக தொடர்ந்து டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது அகில இந்திய மாநாடு சண்டிகரில் செப்டம்பர் 21 முதல் 25 வரை நடைபெற்றது. 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவும் இந்த மாநாட்டுடன் கொண்டாடடப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா முழுதும் இருந்து 800க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த மாநாட்டின் நிறைவுநாளான நேற்று (செப்டம்பர் 25) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக தொடர்ந்து, மூன்றாவது முறையாக டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி விதிப்படி 75-வயது மேற்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்படக் கூடாது என விதி இருந்த நிலையில், அதைத் தளர்த்தி 76 வயதான டி.ராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது அகில இந்திய மாநில மாநாடு

இந்நிலையில், 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பதவி கிடையாது என்ற கட்சியின் விதியை தளர்த்தி, டி. ராஜாவை மீண்டும் தேர்ந்தெடுக்க கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில், மஹாராஷ்டிரா, பீகார் மாநில நிர்வாகிகள், டி.ராஜாவை மீண்டும் தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. பீகார் சட்டசபை தேர்த்ல் விரைவில் வரவுள்ள நிலையில் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் டி.ராஜா மீண்டும் தேசிய பொதுச்செயலாளராக வந்தால் நன்றாக இருக்கும் என்று பீகார் மாநில நிர்வாகிகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 125 பேர் கொண்ட தேசிய குழுவிலும், 31 பேர் கொண்ட தேசிய நிர்வாக குழுவிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் மு.வீரபாண்டியன் இடம்பெற்றுள்ளார். அக்கட்சியின் முன்னாள் தமிழக செயலர் முத்தரசன், தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

யார் இந்த டி.ராஜா?

தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டம் குடியத்தம் அருகே உள்ள சித்தாத்தூரில் ஜூன் 3 ஆம் தேதி 1949ஆம் தேதி, விவசாய குடும்பத்தில் பிறந்தார். பின்னர், கல்லூரிக் காலத்தில் கம்யூனிச சித்தாந்த மாணவர் அமைப்பில் கலந்துகொண்டு அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

d raja

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி ஓய்வு பெற்றதை தொடர்ந்து தேசிய செயலாளராக பொறுப்பேற்ற அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முதல் பட்டியலின பொதுச்செயலாளர் ஆவார். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டி.ராஜா தேசிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.