Karnataka police pt desk
இந்தியா

கர்நாடகா: ரோந்து பணியின்போது மது அருந்தும் காவலர்கள்.. வீடியோ வெளியீடு

கர்நாடகாவில் பணியின்போது காவலர்கள் மது அருந்தும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

webteam

கர்நாடக மாநிலத்தில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட ,112 போலீஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

ரோந்து வண்டி

இந்நிலையில், பெலகாவி மாவட்டம் கடக்காட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரோந்து வாகனத்தில் சென்று நெடுஞ்சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சீருடையில் மது அருந்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.