கஞ்சா போதையில் பெற்ற தாயை அடித்து கொலை செய்த மகன் கைது - அடுத்தடுத்து போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

கடலூரில் கஞ்சா போதையில் தாயை அடித்து கொலை செய்து வீட்டில் புதைத்ததாகக் கூறி மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
arrest
arrestfreepik

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி கஸ்தூரி (47). இவர்களுடைய இளைய மகன் சேவாக் (21) நேற்று கஞ்சா போதையில் பெற்ற தாயை அடித்து கொலை செய்து வீட்டின் உள்ளே புதைத்துவிட்டு அவரது உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கஸ்தூரியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் சேவாக்கிற்கு போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது சேவாக் சரியான முறையில் பதில் அளிக்காமல் போனை வைத்துள்ளார்.

arrest
இறந்த மனைவியின் உடலை பல கி.மீ. தூரம் சுமந்து சென்ற கணவர் - நெகிழ வைத்த ஆந்திர போலீசார்!

இதில் சந்தேகமடைந்த உறவினர்கள், காயத்திரியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் கிடந்த பாயில் ரத்தக்கரை இருந்துள்ளது. வீட்டின் உள் பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திட்டக்குடி வட்டாட்சியர் முன்பு வீட்டில் புதைக்கப்பட்டுள்ள பெண்ணின் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்காக வருவாய்த் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சேவாக்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற தாயை மகனே கஞ்சா போதையில் கொலை செய்து வீட்டில் புதைத்து வைத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

arrest
மிளகாய் பொடி தூவி 60 லட்சத்தை கொள்ளையடிக்க முயற்சி; முன்னாள் காவலர் உட்பட 8 பேர் கைது-நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com